எல்லைகளில் நிலவும் குழப்பம்: பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு
ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்த Entry/Exit System (EES) என்னும் திட்டம் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
Entry/Exit System (EES)
Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

விடயம் என்னவென்றால், இப்படி ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.
இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு
எல்லையில் நிலவும் இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, EES திட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அதை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், அடுத்த வார இறுதியிலிருந்து கோடை விடுமுறை துவங்குவதால், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அதனால் எல்லைகளில் மேலும் கூட்டம் அதிகரிக்கும், குழப்பமும் அதிகரிக்கும்.
ஆகவே, இந்த குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக எல்லைகளில் அதிக அலுவலர்களை பணிக்கு அமர்த்த பிரான்சும் பிரித்தானியாவும் முடிவு செய்துள்ளன.
அதற்காக, பிரித்தானியா 20 மில்லியன் பவுண்டுகள் செலவிட இருப்பதாக பிரித்தானிய போக்குவரத்துச் செயலரான ஹெய்டி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
ஆக, எல்லைகளில் பாஸ்போர்ட், புகைப்படம் மற்றும் கைரேகைகளை சோதிக்கும் அலுவலர்களை அதிகப்படுத்துவதன் மூலம் தாமதத்தைக் குறைக்கவும், குழப்பங்களைத் தவிர்க்கவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |