AI நுட்பத்துடன் புதிய Rafale F4.3: அதிநவீன போர் விமானத்தை வெளியிடும் பிரான்ஸ்
பிரான்ஸ், தனது உலகப் புகழ்பெற்ற Dassault Rafale போர் விமானத்தை மேலும் மேம்படுத்தவுள்ளது.
Dassault Aviation உருவாக்கியுள்ள புதிய Rafale F4.3 போர் விமானம் தற்போது தொழில்நுட்ப பரிசோதனைகளின் கடைசி கட்டத்தை முடித்துள்ளது.
DGA (Direction générale de l'armement) நடத்திய இந்த விமான பரிசோதனை பிரான்ஸ் Istres சோதனை மையத்தில் நடைபெற்றது.
இந்த RAU (Review of Aircraft Usage) பரிசோதனை வாயிலாக, F4.3 ரஃபேல் விமானத்தின் உண்மையான போர் திறன்கள் சோதிக்கபட்டன.
இதில் வான்வழி, தரை மற்றும் கடல்மீது தாக்குதல் சோதனைகள், நவீன ஆயுத ஒருங்கிணைப்பு, மற்றும் மேம்பட்ட சென்சார் செயல்பாடு ஆகியவை உள்ளடங்கியது.
Rafale F4.3 சிறப்பம்சங்கள்:
- புதிய தலைமுறை MICA NG ஏர்-டு-ஏர் குண்டுகள் ஏந்தும் திறன்
- Self-Target Identification வசதி
- மேம்பட்ட SPECTRA electronic warfare system
- AI Algorithms மூலம் தானாகவே இலக்குகளை கண்டறியும் திறன்
- புதிய TALIOS nacelle டார்கெட் அமைப்பு மற்றும் contact software radio
- உயர் அளவிலான தகவல் பகிர்வு மற்றும் உணர்வு ஒருங்கிணைப்பு
தரமான தொழில்நுட்ப முன்னேற்றம்
F4.3 விமானத்திற்கான இந்த ஆரம்ப பரிசோதனைகள், எதிர்கால தேவைகளுக்கு முழுமையான தகுதி பெறும் முயற்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இது பிரான்ஸின் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rafale F4.3 features, Rafale F4.3 AI capabilities, France Rafale fighter jet 2025, Dassault Rafale latest version, MICA NG missile Rafale, Rafale F4.3 vs F3R comparison, French Air Force Rafale upgrade, AI in fighter jets, TALIOS pod Rafale, SPECTRA EW Rafale jet