'கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுங்கள்' பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் வலியுறுத்தல்
ஆங்கிலேய கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்கு வரும் புலம்பெயர்பவர்களை தடுக்க உதவியாக பிரித்தானிய அரசாங்கம் தருவதாக வாக்குறுதி அளித்த பணத்தை கொடுக்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் (Gerald Darmanin), சனிக்கிழமைஎன்று வடக்கு துறைமுகமான டன்கிர்க்கிற்கு சென்றிருந்தபோது, பிரித்தானியாவின் இந்த வாக்குறுதியை அவரை நினைவூட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், ஆங்கிலேய கால்வாய் ()English Channel) வழியாக பிரித்தானியாவுக்கு வரும் புலம்பெயர்பவர்களை பிரான்ஸ் தரப்பிலிருந்து தடுக்கும் முயற்சிகள் சமீபத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
பிரான்சின் கடல்சார் அதிகாரிகள் இப்போது, கால்வாயை கடக்க முற்படுகின்ற புலம்பெயர்ந்த படகுகளை 75% தடுத்துள்ளதாக கூறிய அவர், பிரித்தானியா கொடுப்பதாக சொன்ன பணத்தை கொடுத்தால், 100% தடுத்துவிடலாம் என கூறினார்.
Photo: REUTERS
இந்த ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் பிரித்தானியா 54 மில்லியன் பவுண்டுகள் (74 மில்லியன் டொலர்) வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில், இந்த பணத்தை அவர்கள் கொடுத்தால் பிரெஞ்சு கடற்கரைகளில் ரோந்து செல்லும் பொலிஸாரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உதவும் என ஜெரால்ட் டார்மானின் கூறினார்.
"இப்போதைக்கு, ஒரு யூரோ கூட செலுத்தப்படவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், "நாங்கள் பிரித்தானியர்கள் நிதியுதவிக்கான வாக்குறுதிகளைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம், ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கான எல்லையை பாதுகாத்து வைத்திருக்கிறோம்" என்றார்.
Picture: AP
மக்கள் கடத்தல் படகுகள் புறப்படுவதைத் தடுக்க பிரான்ஸ் அதிகம் செய்யாவிட்டால் பணத்தை தடுத்து நிறுத்தலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல் பரிந்துரைத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்தோர் நீண்ட காலமாக வடக்கு பிரான்ஸ் எல்லைபகுதிகளை பிரித்தானியாவை அடைய ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்திவருகின்றனர். இதற்காக பிரித்தானியாவும் பிரெஞ்சு அரசும் பல வருடங்களாக தடுக்க முயன்றும், அதில் அதிக வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் கடந்து சென்றுள்ளனர்.