அழுவதை நிறுத்துங்க பிரான்ஸ்! மெஸ்ஸி தான் சிறந்த வீரர்.. இறுதிப்போட்டி சர்ச்சைக்கு தரமான பதிலடி
கத்தார் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என பிரான்ஸ் ரசிகர்கள் கையெழுத்து வேட்டை நடத்தி வரும் நிலையில் அர்ஜென்டினா ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
பிரான்ஸ் ரசிகர்கள் கையெழுத்து வேட்டை
அதன்படி அர்ஜென்டினா ரசிகர்கள், அழுவதை நிறுத்துங்க ஃபிரான்ஸ் என ஒரு கையெழுத்து வேட்டையை நடத்தியுள்ள நிலையில் அதில் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை தட்டி தூக்கியது. இந்நிலையில், MesOpinions எனும் வலைதளத்தில் FRANCE 4EVER எனும் ஒரு பயனர் ஃபிபாவுக்கு ஒரு மனு எழுதினார். இதில் நடுவர் குழு மொத்தமாக விலை போய்விட்டது.
Laurence Griffiths/Getty Images
இறுதிப்போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மனுவில் கையெழுத்திட்டு பகிரவும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட, இந்த விவகாரம் கால்பந்து உலகில் கவனம் பெற்றது.
அர்ஜென்டினா பதிலடி
மேலும் மெஸ்ஸி, டி மரியா அடித்த கோல்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் ரசிகர்கள் கூறினர். பிரஞ்சு ரசிகர்களின் மனுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாலெண்டின் கோமஸ் என்ற பயனர் Change.org எனும் தளத்தில் அழுவதை நிறுத்தவும் பிரான்ஸ் என ஒரு கையெழுத்து வேட்டையை தொடங்கினார்.
அதில், நாங்கள் உலகக்கோப்பையை வென்றதில் இருந்து பிரான்ஸ் ரசிகர்கள் இன்னும் அழுவதை நிறுத்தவில்லை. புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிரான்ஸ் அழுவதை நிறுத்தவேண்டும், மேலும் கால்பந்து வரலாற்றின் அதிசிறந்த வீரர் மெஸ்ஸி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் வெறும் மூன்று நாட்களில் சுமார் ஏழு லட்சத்து 25 ஆயிரம் வரை பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
சமூக வலைத்தள விவாதங்கள், ஓன்லைன் மனுக்கள், புகார்கள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்றே தெரியவந்துள்ளது.
navbharattimes