கம்பளிப்பூச்சிகள் தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை
Caterpillars soon expected in some areas of France: பிரான்சின் சில பகுதிகளில் கம்பளிப்பூச்சிகள் பரவலாம் என்பதால், அது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு பிரான்சில் விரைவில் கம்பளிப்பூச்சிகள் நடமாட்டம் எதிர்பார்க்கப்படுவதால், அது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பளிப்பூச்சிகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
நச்சுத்தன்மை கொண்ட, ‘pine’ processionary caterpillars என்னும் ஒருவகை கம்பளிப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

விட்டில் பூச்சிகள் ஜூன் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையில் மரங்களின் உச்சியில் முட்டைகளை இடுகின்றன.
ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த முட்டைகளிலிருந்து வெளியாகும் கம்பளிப்பூச்சிகள், மரத்திலிருந்து இறங்கி மண்ணை நோக்கிப் பயணிப்பதுண்டு.
இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலில் உள்ள முடிகள் மனிதர்கள் மீது பட்டால், கடும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தும்.
அது மட்டுமின்றி, இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலிலிருந்து விழுந்த முடிகள், மண்ணில் விழுந்து கிடக்கும் நிலையிலும், மூன்று ஆண்டுகள் வரை மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விடயம் என்னெவென்றால், கம்பளிப்பூச்சிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதையே முற்றிலும் தவிர்த்தவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அதற்குக் காரணம் என்னவென்றால், கம்பளிப்பூச்சிகளின் உடலிலிருந்து விழுந்த முடிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, கம்பளிப்பூச்சிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதையே முற்றிலும் தவிர்த்தவர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், கம்பளிப்பூச்சிகளைக் கண்டால், அவற்றை மக்கள் எதுவும் செய்ய முயற்சிக்கவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அதற்கு பதிலாக, உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால், அவர்கள் வந்து கம்பளிப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த பொறி வைப்பது முதலான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.