பிரான்ஸ் மக்களுக்கு கம்பளிப்பூச்சிகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
பிரான்சில் கம்பளிப்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் கம்பளிப்பூச்சிகள் எண்ணிக்கை
பிரான்சில், குறிப்பாக வட பிரான்சில், வரலாறு காணாத அளவிலான வெப்பம் காரணமாக கம்பளிப்பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

Seine-Maritime பகுதியில் வாழும் மக்களில் மூன்றில் ஒருபங்கு மக்கள், கடந்த வாரத்தில், இந்த கம்பளிப்பூச்சிகளால் ஏற்பட்ட அரிப்பு, எரிச்சல் காரணமாக மருத்துவர்களை சந்திக்கச் சென்றுள்ளார்கள்.
இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலில் உள்ள முடிகள் மனிதர்கள் மீது பட்டால், கடும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தும்.
இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலிலிருந்து விழுந்த முடிகள், மண்ணில் விழுந்து கிடக்கும் நிலையிலும், மூன்று ஆண்டுகள் வரை மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
விடயம் என்னெவென்றால், கம்பளிப்பூச்சிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதையே முற்றிலும் தவிர்த்தவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
அதற்குக் காரணம் என்னவென்றால், கம்பளிப்பூச்சிகளின் உடலிலிருந்து விழுந்த முடிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, கம்பளிப்பூச்சிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதையே முற்றிலும் தவிர்த்தவர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், கம்பளிப்பூச்சிகளைக் கண்டால், அவற்றை மக்கள் எதுவும் செய்ய முயற்சிக்கவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அதற்கு பதிலாக, உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால், அவர்கள் வந்து கம்பளிப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த பொறி வைப்பது முதலான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |