பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பேரதிர்ச்சி: வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்
பிரான்ஸில் காட்டுத்தீ பரவியதை அடுத்து 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியேறிய 13,000 வணிக நிறுவனங்கள்
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜிரோண்ட்(Gironde) மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் அவசரமாக வெளியேறியுள்ளன.
கிட்டத்தட்ட 13,000 வணிக நிறுவனங்கள் வெளியேறியதால் அப்பகுதியில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக வணிக நிறுவனங்கள் வெளியேறி இருப்பதை பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் ரோலண்ட் லெஸ்குர் “பொருளாதார பேரதிர்ச்சி” என விவரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் எப்போது தங்களது வணிகங்களை தொடர முடியும் என்பது குறித்து தெளிவு இல்லாததால் நிச்சயமற்ற தன்மை வணிக நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பொருளாதார சேதம்
காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்து இப்போதே கணக்கிட முடியாது என்பதோடு, இதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த காட்டுதீயினால் ஏற்பட்ட பாதிப்பை இப்போதே கணக்கிடுவது என்பது முன்கூட்டிய செயல், எப்படி இருந்தாலும் நாட்டை உலுக்கி வரும் காட்டுத்தீ வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை பிரான்ஸ் அரசு பேச்சாளர் மோட் பிரெஜியோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள தீ விபத்தினால் கிட்டத்தட்ட 42,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகி உள்ளது.
கிட்டத்தட்ட 2,20,000 மக்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |