தரைவழியாக உக்ரைன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும்: பணிகளை தொடங்கியது பிரான்ஸ்
தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா.
தரைவழியாக தானியங்களை ஏற்றுமதி செய்யும் பணியில் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் உணவு தானியங்களை தரை வழியாக ஏற்றுமதி செய்யும் பணியில் பிரான்ஸ் ஈடுப்பட்டுள்ளது என அந்த நாட்டின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சர் மார்க் ஃபெஸ்னோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் விளைவிக்கப்பட்ட உணவு தானிய பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக துருக்கி, ஐக்கிய நாடுகள் சபை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனால் தானிய ஏற்றுமதி நிறுத்தப்பட்டு சந்தையில் மீண்டும் தானியங்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் திட்டமிட்டபடி திங்கட்கிழமையும் 16 கப்பல்கள் தானியங்களுடன் உக்ரைனில் இருந்து புறப்படும் என துருக்கி, உக்ரைன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து தானியங்களை வெளியேற்ற கருங்கடல் வழியை பயன்படுத்தாமல், போலந்து மற்றும் ருமேனியா வழியாக உள்ள தரைவழியை பயன்படுத்துவதற்கு தேவையான பணிகளை செய்து வருவதாக பிரான்சின் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் மார்க் ஃபெஸ்னோ திங்களன்று தெரிவித்துள்ளார்.
EPA
பிரான்ஸ் அதன் ஐரோப்பிய யூனியன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, உக்ரைன் தானிய ஏற்றுமதி விஷயத்தை புடினின் புடினின் கெட்ட எண்ணத்திலும் அல்லது பிறரின் நல்லெண்ணத்தின் கைகளிலும் வைக்காத அமைப்பை நிறுவுவதில் கவனம் செலுத்துகிறது என்று அமைச்சர் மார்க் ஃபெஸ்னோ RMC வானொலி ஒளிபரப்பில் விளக்கினார்.
கூடுதல் செய்திகளுக்கு; வீட்டின் கதவிற்கு பிங்க் நிறம் பூசியது குற்றமா? ஸ்காட்லாந்து பெண் எதிர்கொண்டுள்ள அபராதம்
தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் ரஷ்யாவின் முடிவால் பிரான்ஸ் நேரடியாக பாதிக்கப்படாது என்றாலும் , இந்த நடவடிக்கையால் மூன்றாம் உலக நாடுகள் பாதிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் தெரிவித்தார்.