முத்தையா முரளிதரனுக்கு காஷ்மீரில் 25 ஏக்கர் இலவச நிலம்? சட்டமன்றத்தில் வெடித்த சர்ச்சை
முத்தையா முரளிதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் வழங்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தவர்.
2010 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.

52வது பிறந்தநாள் கொண்டாடும் முத்தையா முரளிதரனின் சொத்து மதிப்பு: IPLயில் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?
முத்தையா முரளிதரன், Ceylon Beverages என்ற குளிர்பான நிறுவனத்தை இலங்கையில் தொடங்கி நடத்தி வருகிறார்.
குளிர்பான நிறுவனம்
இந்த நிறுவனத்தை இந்தியாவில் விரிவுபடுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முத்தையா முரளிதரனின் இந்த நிறுவனத்திற்காக, 25.75 ஏக்கர் நிலத்தை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு இலவசமாக வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இலவச நிலம்
இது குறித்து காஷ்மீர் மாநில சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய் தாரிகாமி, "இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது?" என கேள்வியெழுப்பினார்.
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஏ.மிர், "இந்தியர் அல்லாத ஒருவருக்கு பைசா கூட செலவழிக்காமல் நிலம் வழங்கப்பட்டது ஒரு தீவிரமான பிரச்னை. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்." என கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு விளக்கமளித்த விவசாய அமைச்சர் ஜாவேத் அஹ்மத் தார், "இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இது தொடர்பாக எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மை நிலவரத்தை அறிய ஆய்வு செய்வோம். இந்த விவகாரத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்வோம்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |