75 ஆண்டுகளாக இலவச ரயில் சேவை.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக இலவச ரயில் சேவை ஒரே ஒரு இடத்தில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இலவச ரயில் சேவை
இந்திய ரயில்வேயில் 13,000 -க்கும் மேற்பட்ட ரயில்கள் ஒவ்வொரு நாளும் இயங்குகின்றன. இவை, குறைந்த கட்டணத்தில் பயணிகளை அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்றடைய உதவுகின்றன.
இருப்பினும், இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக தனது பயணிகளுக்கு இலவச சேவையை வழங்கி வரும் ரயில் ஒன்று உள்ளது.
பொதுவாக நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, இந்திய இரயில்வேயில் இருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் டிக்கெட்டை வாங்க வேண்டும். எந்த ஒரு பயணியும் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் இந்த ரயிலில் ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் டிக்கெட் வாங்க வேண்டியதில்லை.
இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம், பக்ரா பகுதியில் சட்லஜ் நதியின் குறுக்கே கடந்த 1948-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கியது.
இதனால், பஞ்சாபின் நங்கல் பகுதியில் இருந்து சிமென்ட், கற்கள் ஆகியவை அணை கட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டன .
இதனால், 1948 -ம் ஆண்டில் பஞ்சாபின் நங்கல், இமாச்சல பிரதேசத்தின் பக்ரா இடையே 13 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.
மேலும், கனரக இயந்திரங்கள் மற்றும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பாதையில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில் தகவல் தெரிவிக்கிறது.
குறிப்பாக, ரயில் சேவை இந்திய ரயில்வேயால் நிர்வகிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரயிலில் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.
இதையடுத்து, பக்ரா அணை கட்டுமான பணிகள் நிறைவடைந்த பிறகும் நங்கல்-பக்ரா இடையே இன்றுவரை இலவச ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பக்ரா-நங்கல் ரயில் சேவை முதலில் நீராவி என்ஜின்களால் இயக்கப்பட்டது. ஆனால் 1953 ஆம் ஆண்டில், அவற்றை நவீனப்படுத்த மூன்று நவீன இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டன.
புறப்படும் நேரம்
ஒவ்வொரு நாளும் காலை 7.05 மணிக்கு, நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு, காலை 8.20 மணிக்கு பக்ராவை வந்தடைகிறது. அதேபோல, காலை 8.20 மணிக்கு பக்ராவில் இருந்து நங்கலுக்கு இலவச ரயில் புறப்படும்.
லேபர் ஹட் ஸ்டேசன், பிஆர்ஓ, பாரமலா, நெஹ்லா, ஒலிண்டா ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும் மேலும், பிற்பகலில் மாலை 3.05 மணிக்கு நங்கலில் இருந்தும் மாலை 4.20 மணிக்கு பக்ராவில் இருந்தும் ரயில் புறப்படும்.
அணை கட்டும்போது மரப்பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டதை போலவே தற்போதும் இயக்கப்படுகிறது. ஆனால், டீசல் இன்ஜின் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், 10 பெட்டிகள் இருந்த நிலையில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இலவச ரயில் மூலம் 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர்.
பக்ராவில் இருந்து நங்கல் பகுதிக்கு வாகனத்தில் செல்ல சுமார் 40 கி.மீ. தொலைவு மலைப்பகுதியில் பயணிக்க வேண்டும். ஆனால், ரயிலில் 13 கி.மீ. தொலைவை 40 நிமிடங்களில் கடக்க முடியும்.
இது தான் இந்தியாவில் இருக்கும் ஒரே இரு இலவச ரயில் சேவை ஆகும். இதனை, தினமும் 800 பேர் பயன்படுத்துகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |