ஏழு நாடுகளில் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்
Shop freezers in seven European countries hit by cyber attack: ஏழு ஐரோப்பிய நாடுகளில், கடைகளிலுள்ள ஃப்ரீஸர்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
சென்ற மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள ஃப்ரிட்ஜ்கள் சைபர் தாக்குதலுக்குள்ளான விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், ஏழு ஐரோப்பிய நாடுகளில், கடைகளிலுள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்கள் தற்போது சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
ஏழு ஐரோப்பிய நாடுகளில்...
சென்ற மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள ஃப்ரிட்ஜ்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகின.

அதாவது, ஹேக்கர்கள் ஃப்ரிட்ஜ்கள், உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஃப்ரீஸர்களின் வெப்பநிலையை 50 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதால், அவற்றில் வைக்கப்பட்டிருந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகியுள்ளன.
உணவுப்பொருட்கள் கெட்டுப்போனதால், அவற்றை முழுமையாக குப்பையில் வீசவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பெல்ஜியம், லக்ஸம்பர்க், ஸ்வீடன், அயர்லாந்து, நெதர்லாந்து, எஸ்தோனியா மற்றும் பின்லாந்து ஆகிய ஏழு நாடுகளிலுள்ள பல்பொருள் அங்காடிகள், பிரான்சைப்போலவே சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

ஐரோப்பாவிலுள்ள பல பல்பொருள் அங்காடிகள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
பல்பொருள் அங்காடிகளிலுள்ள இந்த ஃப்ரிட்ஜ்கள், கண்ட்ரோல் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
ஃப்ரிட்ஜ்கள் அல்லது ஃப்ரீஸர்களில் திடீரென ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அலுவலகத்தில் இருந்தபடியே அவற்றை இணையம் மூலமாக சரி செய்வதற்காக இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஹேக்கர்கள், அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்து வெப்பநிலையை உயர்த்திவிட்டார்கள்.
இதற்கிடையில், இந்த சைபர் தாக்குதல்களின் பின்னால் இருப்பது யார் என்பது இன்னமும் தெரியவரவில்லை.