கணவரால் பிரபல பிரான்ஸ் நடிகைக்கு நேர்ந்த கொடூரம்: முகம் முழுவதும் இரத்ததுடன் வெளியிட்டுள்ள புகைப்படம்
பிரான்ஸ் நாட்டின் பிரபல திரைப்பட நடிகை ஜுடீத் செம்லா தனது முகம் முழுவதும் இரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரது ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பிரபல திரைப்பட நடிகை ஜுடீத் செம்லா தனது மகளுடன் பாரிஸில் வசித்து வரும் நிலையில், அவரது கணவருடன் ஏற்பட்ட சண்டையில் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து விளக்கும், ஒருவருடத்திற்கு முந்தைய புகைப்படங்களை அவரது இணைய தள பக்கத்தில் ஜுடீத் செம்லா வெளியிட்டுள்ளார்.
அதில், ஜுடீத் செம்லா பயங்கர இரத்த காயங்களுடனும், மூகம் வீங்கியும் காணப்படுகிறார், அந்த புகைப்படத்திற்கு கீழே அவர் தெரிவித்து கருத்தில், இது எனது மகளின் தந்தை(கணவர்) எனக்கு அடிக்கடி கொடுக்கும் பரிசு, இது முதல் முறை கிடையாது, இதற்கு முன்பும் இதுபோல் நடந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மூன்று முறை காவல்துறையிடம் புகார் அளித்துவிட்டேன், ஒவ்வொரு முறையும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இருப்பினும் இது தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எனது கண்களை சுற்றி இருக்கும் நீல வண்ண தழும்பு என் மீது எனக்கே வெறுப்பை துண்டுகிறது, எனது முகம் முழுக்க சிவப்பு தழும்புகள் எனது தோற்றத்தையே மாற்றியிருக்கிறது.
கூடுதல் செய்திகளுக்கு: இதயம் நின்றுவிட்டது...முன்னாள் பிரதமரின் உடல்நிலை கவலைக்கிடம்: ஜப்பான் அதிகாரி தகவல்!
எனது மகளுக்காக அனைத்தையும் பொருத்துக் கொள்கிறேன், ஆனால் வாழ்க்கையோடு எத்தனை முறைதான் போராடுவது, இனியும் இதனை சகித்துக் கொள்ள முடியாது.