பிரித்தானியா மக்கள்-மகாராணியாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இளவரசர் பிலிப் மறைவை தொடர்ந்து, மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் பிரித்தானியா மக்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் மறைவு காரணமாக உலகத்தலைவர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், கணவரின் இழப்பிற்கு, மேன்மை தங்கிய எலிசபெத் மகாராணிக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
I wish to express my sincere condolences to Her Majesty Queen Elizabeth, The Royal Family and the British people upon the death of His Royal Highness The Prince Philip who lived an exemplary life defined by bravery, a sense of duty and commitment to the youth and the environment.
— Emmanuel Macron (@EmmanuelMacron) April 9, 2021
மேன்மை தங்கிய எலிசபெத் மகாராணிக்கும், அரச குடும்பத்தினரிற்கும், பிரித்தானிய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், மேன்மை தங்கிய இளவரசர் பிலிப் எடுத்துக்காட்டான ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
இவர் தனது வீரத்தாலும், கடமையாலும், இளைஞர்கள், மற்றும் சுற்றுப்புறச்சூழல் போன்றவறிற்கான அர்ப்பணிப்பான வாழ்வாலும் சிறந்த மனிதாராக பிலிப் வாழ்ந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.