பிரதமருக்கு வந்த பார்சலில் பெண்களின் உள்ளாடைகள்... யார் எதற்காக அனுப்பியது தெரியுமா?
பிரான்ஸ் பிரதமர் தனக்கு வந்த பார்சல்களில் பெண்களுக்கான உள்ளாடைகள் இருக்கும் என ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டார். ஆனால், வரும் நாட்களில் அவருக்கு தொடர்ந்து பெண்களின் உள்ளாடைகள் அடங்கிய பார்சல்கள் பல வரும் என எதிர்பார்க்கலாம்.
பிரான்ஸ் சமீபத்தில் அறிவித்த கொரோனா நெறிமுறைகளின் கீழ், அத்தியாவசியமற்ற பொருட்கள் என்ற பட்டியலின் கீழ் உள்ளாடைகள் சேர்க்கப்பட்டு, உள்ளாடைக் கடைகள் மூடப்பட, அப்படியா, வெறும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து ஃபேஷன் ஷோக்களில் அழகு மங்கைகள் கேட் வாக் நடத்தும் வரும் பிரான்சில், உள்ளாடைகள் அத்தியாவசியமற்ற பொருட்களா, பார்க்கலாம் என களமிறங்கிய சிறு உள்ளாடை நிறுவனங்களின் உரிமையாளர்கள், பிரதமருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்கள். அதன்படி, பிரான்ஸ் பிரதமர் Jean Castexக்கு பெண்கள் அணியும் உள்ளாடைகள் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர், உள்ளாடைகளும் அத்தியாவசிய பொருட்கள்தான் என ஒப்புக்கொள்ளும் வரை, மேலும் நூற்றுக்கணக்கான உள்ளாடைகளை பர்சலில் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார்கள் சிறு வணிகர்கள்.
உள்ளூர் சிறு வர்த்தகமும் முக்கியமானதே, அது, உள்ளூர் மட்டத்தில் பொருளாதாரத்தை பராமரிக்க உதவுகிறது என்று கூறும் வர்த்தகர்கள், நூற்றுக்கணக்கான உள்ளாடைக் கடைகள் மூடப்பட்டதால் தாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை உணர்த்த தங்களுடைய இந்த அதிரடி நடவடிக்கை உதவும் என தாங்கள் நம்புவதாக தெரிவிக்கிறார்கள்.