வெள்ளை மாளிகையில் டிரம்ப்-மக்ரோன் சந்திப்பு: செய்தியாளர் சந்திப்பின் போது நிகழ்ந்த சுவாரஸ்யம்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேக்ரான்-டிரம்ப் சந்திப்பு
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 3வது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், இது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்திப்பு ஓவலில் உள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைனுக்கு அளிக்கப்படும் நிதி குறித்த கருத்து ஒன்றை தெரிவித்தார்.
உடனே அருகில் இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் குறுக்கிட்டு டிரம்பின் கருத்தை சரி செய்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைனுக்கான நிதி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதில் “ஐரோப்பிய நாடுகள் பணத்தை உக்ரைனுக்கு கடனாக வழங்குகிறார்கள், அத்துடன் அந்த பணத்தை அவர்கள் திரும்பவும் பெறுகிறார்கள்” என தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “அப்படி இல்லை, சரியாக சொல்வதென்றால் நாங்கள் மொத்த முயற்சியில் 60% செலுத்தினோம். என்று குறிப்பிட்டார்.
Notable moment in the Oval Office where Trump says “Europe is loaning the money to Ukraine” and “they’re getting their money back” when Macron interrupted to say, “No, in fact, to be frank, we paid. We paid 60% of the total effort.” pic.twitter.com/QFzv9WhsIz
— Kaitlan Collins (@kaitlancollins) February 24, 2025
மேலும் உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதியின் விவரங்களையும் அவர் விளக்கினார்.
இறுதியில் டிரம்ப் “எப்படி இருந்தாலும் அவர்கள் பணத்தை திரும்ப பெறுகிறார்கள், தற்போது நாமும் அதை செய்கிறோம் என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |