இந்தியாவுக்கு மலையேற்றத்துக்கு சென்ற பிரான்ஸ் நாட்டவர் சந்தித்த மோசமான அனுபவம்
இந்தியாவுக்கு மலையேற்றத்துக்காக சென்ற பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் மலையிலிருந்து கீழே விழுந்த நிலையில் இரண்டு நாட்களாக உதவிக்கு யாருமின்றி அவதியுற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டவர் சந்தித்த மோசமான அனுபவம்
பிரான்ஸ் நாட்டவரான ப்ரூனோ ரோஜர் (52) என்பவர் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கடந்த புதன்கிழமை, கர்நாடகாவிலுள்ள Hampi என்னுமிடத்தில் மலையேற்றத்துக்காக சென்ற ரோஜர், மாலை 6.00 மணியளவில், மலையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
விழுந்ததில் அவரது இடது காலிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்படவே, அங்கேயே இரண்டு நாட்களாக அசைய முடியாமல் தனிமையில் துடித்துவந்துள்ளார் ரோஜர்.

இரண்டு நாட்களுக்குப் பின், தவழ்ந்தபடியே வாழைத்தோட்டம் ஒன்றிற்கு வந்த ரோஜரைக் கண்ட உள்ளூர் விவசாயிகள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
விரைந்துவந்த பொலிசார் ரோஜரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனைக்குச் செல்லும்போது, அந்த மலையடிவாரத்தில், இரண்டு நாட்களாக, தான் தண்ணீர் மட்டுமே குடித்து தாக்குப்பிடித்ததாக ரோஜர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |