தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி
சுவிட்சர்லாந்தில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், மற்றவர்களுக்கு இடையூறாக தோட்டத்தில், புல் வெட்டும் இயந்திரம் மூலம் சத்தம் உருவாக்குவதால் அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு
50 வயதாகும் அந்த பிரான்ஸ் நாட்டவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தின் Jura மாகாணத்தில் வாழ்ந்துவருகிறார்.
2024ஆம் ஆண்டு அவர் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த நிலையில், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அவர் சுவிஸ் நாட்டவரைப் போல நடந்துகொள்ளவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதாவது, அவர் தனது தோட்டத்தில் இயந்திரம் மூலம் புல்வெட்டுவதாலும், விடுமுறை நாட்களில் தோட்டத்தில் வேலை பார்ப்பதாலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன், அவர் பல ஆண்டுகளாக தனது வீட்டை புதுப்பித்துவருவதாகவும், அதனால் குப்பை குவிவதாகவும், அது, அவர் சுவிஸ் நாட்டுடன் ஒன்றிணைந்து வாழவில்லை என்பதையே காட்டுவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுவிஸ் நீதிமன்றம் அதிரடி
தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அவர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் போதுமான காலத்துக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தது மற்றும் உள்ளூர் மொழிப்புலமை உட்பட குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றியுள்ளதாகவும், அவர் மீது எந்த புகாரும் முறைப்படி அளிக்கப்படவில்லை என்றும் கூறிவிட்டது.
ஆகவே, அவர் சுவிஸ் குடியுரிமை பெறலாம் என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், அந்த புல் வெட்டும் இயந்திரம் மூலம் இடையூறு ஏற்படுத்தாமல் அக்கம்பக்கத்தவர்களுடன் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துபோகுமாறு மட்டும் அவரை அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |