முட்டை விநியோகத்தை நிறுத்திய பிரெஞ்சு உற்பத்தியாளர்கள்: விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்சின் முட்டை உற்பத்தியில் முக்கிய பகுதியான Brittanyயிலுள்ள முட்டை உற்பத்தியாளர்கள், சில நாட்களுக்கு முட்டை விநியோகத்தை நிறுத்தியுள்ளார்கள்.
என்ன காரணம்?
முட்டை உற்பத்தி செய்வோர், தங்களிடம் பணியாற்றுபவர்களை விட தாங்கள் குறைவாகவே சம்பாதிப்பதாக தெரிவிக்கிறார்கள். உற்பத்தி செலவை ஒப்பிடும்போது வரும் இலாபம் குறைவாக இருப்பதாகக் கூறும் அவர்கள், பல்பொருள் அங்காடிகள் அதிக விலைக்கு முட்டை விற்பதாகவும், ஆகவே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கும் தொகையை உயர்த்தவேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது முட்டை விலையை உயர்த்திக்கொடுக்கவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பிரான்சில் முட்டை உற்பத்தி செய்யும் முக்கிய பகுதி Brittanyயாகும். நாட்டின் முட்டை உற்பத்தியில் 22 சதவிகிதம் அங்குதான் நடைபெறுகிறது.
முட்டை உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை
Rouen பகுதியில் முட்டை உற்பத்தி செய்யும் ஒருவரின் பண்ணையில் நாளொன்றிற்கு 7,500 முட்டைகள் கிடைக்கின்றனவாம்.
ஆனால், அவருக்கு முட்டை ஒன்றிற்கு சுமார் 18 சென்ற்க்கும் சற்று அதிகமாக மட்டுமே கிடைக்கிறதாம். அதைவிட கொஞ்சமாவது அதிகம் கிடைத்தால்தான் அவருக்கு ஒரு சிறிய வருவாயாவது கிடைக்கும் என்கிறார் விவசாயி ஒருவர்.
விடயம் என்னெவென்றால், ஒரு வருடத்துக்கு முன்புதான், அவர் 350,000 யூரோக்கள் தன் தொழிலில் முதலிடு செய்தாராம்.
ஆக, ஓரளவு வருவாயாவது அவருக்குக் கிடைக்காவிட்டால், செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும் என்கிறார் அவர்.
ஆகவேதான், அடுத்த கட்டமாக முட்டை விநியோகத்தை நிறுத்துவது தொடர்பாக மேலும் சில நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.