அட்லாண்டிக் பெருங்கடலில் கூட்டு நடவடிக்கை: நீர்மூழ்கிக் கப்பலை சிறைபிடித்த பிரான்ஸ் கடற்படை
French navy seizes Suspected drug vessel: போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட கப்பலை பிரான்ஸ் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
கப்பலை சிறைபிடித்த பிரான்ஸ் கடற்படை
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட அரை-நீர்மூழ்கிக் கப்பலை(semi-submersible) அட்லாண்டிக் பெருங்கடலில் வைத்து பிரான்ஸ் கடற்படை அதிரடியாக இடைமறித்து சிறை பிடித்துள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது கப்பலில் இருந்த 2 மாலுமிகளையும் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட கப்பலில் பிரான்ஸ் கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் எதுவும் சிக்காத போதிலும், சந்தேகத்திற்குரிய அந்தக் கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கப்பல் இடைமறிப்பு நடவடிக்கையானது கொலம்பியா மற்றும் அமெரிக்காவின் கடற்படை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நடவடிக்கையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.