பிரான்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழப்பு: உக்ரைனில் இதுவே முதல் முறை
உக்ரைனில் பிரான்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 37 வயது புகைப்பட பத்திரிகையாளர் ஆண்டனி லலிகன்(Antoni Lallican) உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை ஐரோப்பிய பத்திரிகையாளர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா மோதல் தொடங்கிய 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் திகதியிலிருந்து இதுவரை உக்ரைனில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் பத்திரிக்கையாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ட்ரோன் தாக்குதலில் உக்ரைனிய பத்திரிகையாளர் ஹியோர்ஜிய் இவான்சென்கோ என்பவர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notre compatriote, le photojournaliste Antoni Lallican, accompagnait l’armée ukrainienne sur le front de la résistance.
— Emmanuel Macron (@EmmanuelMacron) October 3, 2025
J’ai appris avec une profonde tristesse son décès, victime d’une attaque de drones russes.
J’adresse mes condoléances…
நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட இரண்டு பத்திரிக்கையாளர்களும் PRESS என குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |