பிரான்சில் இளம் பெண்ணிடம் ஆபாச புகைப்படம் கேட்ட பொலிஸ் அதிகாரி! கசிந்த முக்கிய தகவல்
பிரான்சில் பொலிசார் ஒருவர், இளம் பெண்ணிடம் ஆபாச புகைப்படம் கேட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரான்சின், Rouen (Seine-Maritime) நகரில் அமைந்திருக்கும், காவல்நிலையத்திற்கு கடந்த மாதம் பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார்.
அப்போது, அவரிடம் கலந்துரையாடிய பொலிஸ் அதிகாரி, சில நாட்களின் பின்னர் அப்பெண்ணுடன் தனியாக தொடர்புகொண்டு பேசி வந்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணின் அவரின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை அனுப்பும் படி கோரியுள்ளார். அதை அடுத்து குறித்த பெண் மீண்டும் காவல்நிலையத்தில் மற்றுமொரு புகாரை அளித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு பதியப்பட்ட புகாரை அடுத்து, காவல்துறையினரின் காவல்துறையான IGPN அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.