பிரான்ஸ் ரயில் நிலையத்தில் கத்தி குத்து! காவல்துறையினரை குறிவைத்த நபர் சுட்டுக் கொலை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் பொலிசாரை கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸில் உள்ள Gare du Nord ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பிரான்ஸ் போக்குவரத்து துறை அமைச்சர் Jean-Baptiste Djebbari கூறியதாவது, திங்கட்கிழமை காலை Gare du Nord ரயில் நிலையத்தில் பொலிசாரை கத்தியால் தாக்கிய நபரை, சம்பவயிடத்தில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை. கத்தியால் தாக்கிய நபர் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டார்.
மர்ம நபர் கத்தியால் தாக்கியதில், இரண்டு பொலிசார் லேசான காயமடைந்துள்ளனர் என Djebbari தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை என குறிப்பிட்ட Gerald Darmanin, சுட்டுக்கொல்லப்பட்ட நபர் Gare du Nord ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததற்காக, ஏற்கனவே காவல்துறையினருக்கு தெரிந்தவர் என கூறினார்.