பள்ளி அருகே அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர்: பிரான்ஸ் பொலிசார் அதிரடி
பிரான்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றின் அருகே பட்டாக்கத்தியுடன் நடமாடிய ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
பள்ளி அருகே ஆயுதங்களுடன் நடமாடிய நபர்
வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில், பிரான்சிலுள்ள La Seyne-sur-Mer என்னுமிடத்தில், பள்ளி ஒன்றின் அருகே ஒருவர் பட்டாக்கத்தியுடன் நடமாடுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அச்சுறுத்தும் வகையில் நடமாடிய அந்த நபரிடம், கத்தியைக் கீழே போடும்படி பொலிசார் கூறியும் அவர் கேட்கவில்லை என்றும், பொலிசாரை நோக்கி அவர் கத்தியுடன் முன்னேறியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, பொலிசார் அவரை ஆறுமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது இடுப்புக்குக் கீழே குறிவைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
பள்ளிப் பிள்ளைகளை அச்சுறுத்தும் வகையில் அவர் நடந்துகொண்டதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் குறித்த எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |