பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: வெற்றி யாருக்கு? வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சமீபத்திய கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகள் இமானுவல் மேக்ரானுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளன.
நேற்று முன்தினம் மற்றும் நேற்று (ஏப்ரல் 20, 21) நடத்தப்பட்ட அந்த கருத்துக்கணிப்பில், மேக்ரான் 56 சதவிகித வாக்குகள் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பிரான்ஸ் வாக்காளர்களில் 72 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இறுதி முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற ஒரு நிச்சயமற்ற தன்மையும் நிலவுவதையும் மறுப்பதற்கில்லை.
இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்கு இன்னமும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், பிரச்சாரத்தால் வாக்குகள் எண்ணிக்கையில் மாற்றங்கள் நிகழுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், மேக்ரானுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய வெளிநாடுகளிலுருமிருந்து ஆதரவு குவிகிறது.
அந்நாட்டு அரசியல்வாதிகளைப்போலவே, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் கடுமையான விமர்சகரான அலெக்ஸி நவால்னி ஆகியோரும், மேக்ரானுக்கு வாக்களிக்குமாறு பிரான்ஸ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.