பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 78 புலம்பெயர்ந்தோர்: ஏற்பட்ட திடீர் நிகழ்வு..மீட்ட பிரெஞ்சு கடலோரப்படை
ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்றபோது பழுதடைந்த படகில் இருந்து, 78 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு கடலோரக் காவல்படை மீட்டது.
3,863 புலம்பெயர்ந்தோர்
பிரித்தானியாவிற்கு இந்த ஆண்டு இதுவரை 3,863 புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகள் மூலம் புலம்பெயர்ந்து வந்துள்ளனர்.

வியாழக்கிழமை அன்று மட்டும், இரண்டு சிறிய படகுகள் மூலம் 144 புலம்பெயர்ந்தோரும், மூன்று படகுகள் மூலம் 116 பேர் வெள்ளிக்கிழமை அன்றும் நாட்டிற்குள் நுழைந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று பெல்ஜியத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் நுழைய சிறிய படகில் பலர் பயணித்துள்ளனர்.
ஆனால், அவர்களின் படகின் இயந்திரம் ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்றபோது பழுதடைந்தது.
அதே சமயம், ஏராளமான படகுகள் பிரித்தானியாவை நோக்கி புறப்பட்ட தகவல், பிரெஞ்சு கடல்சார் தலைமை அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.
மீட்ட பிரெஞ்சு கடலோரக் காவல்படை
பின்னர் பழுதாகி நின்ற படகில் இருந்து 78 புலம்பெயர்ந்தோர் பிரெஞ்சு கடலோரக் காவல்படையால் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "புயல்பெயர்ந்தோர் படகின் இயந்திரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, 78 பேரை கடலோரக் காவல்படைக் கப்பல் மீட்டு , பின்னர் அவர்கள் Calais-யின் quayயில் தரைவழி மீட்புப் பணிகளுக்காக இறக்கிவிடப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.
பிரெஞ்சு கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கடல் பகுதி ஆபத்தான பகுதி என்று கூறி, மற்றவர்கள் அந்த நீர்ப்பரப்பைக் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், எல்லை தாண்டி வருவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |