இனி பனிச்சறுக்கு விளையாட்டு கிடையாது: பிரெஞ்சு ரிசார்ட் ஒன்று அறிவிப்பு
மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக போதுமான அளவு பனி இல்லாததால் இனி பனிச்சறுக்கு விளையாட்டு கிடையாது என பிரெஞ்சு ரிசார்ட் ஒன்று அறிவித்துள்ளது.
இனி பனிச்சறுக்கு விளையாட்டு கிடையாது
பிரான்ஸ் ஸ்பெயின் எல்லையில் அமைந்துள்ளது Pyrenees மலைத்தொடர்.
இந்த மலைத்தொடரில் பிரான்ஸ் பகுதியில் Hautacam என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்று அமைந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக போதுமான அளவில் பனி இல்லாததால் பனிச்சறுக்கு விளையாட்டுக்களை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது. அதனால் ரிசார்ட்டுக்கு நிதி ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இனி Hautacam ரிசார்ட்டில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அந்த ரிசார்ட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இப்படி பனிச்சறுக்கு விளையாட்டை நிறுத்துவதால் உள்ளூர் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிறார்கள் வர்த்தகர்கள்.
ஆகவே, ரிசார்ட்டை மூடக்கூடாது எனக்கோரி பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார் வர்த்தகர் ஒருவர்.
இதுவரை அந்த பிரேரணையில் 1,245பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |