பிரான்ஸ் போராட்டங்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு ஸ்பைடர்மேன் செய்த செயல்
பிரான்ஸ் போராட்டங்களுக்கு ஆதரவாக, 38 மாடிக் கட்டிடம் ஒன்றில் எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி ஏறினார் பிரெஞ்சு ஸ்பைடர்மேன்.
மேக்ரான் கீழே இறங்கி வாருங்கள்
பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என அழைக்கப்படுபவர் Alain Robert, (60). எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி, பல மாடிக் கட்டிடங்களில் சர்வசாதாரணமாக ஏறக்கூடியவர்.
சமீபத்தில் அவர், பிரான்ஸ் போராட்டங்களுக்கு ஆதரவாக, பாரீஸிலுள்ள 38 மாடிக் கட்டிடம் ஒன்றில் எந்த உபகரணங்களின் உதவியுமின்றி ஏறினார்.
Reuters
ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து போராடுபவர்களுக்கு என் ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறிய ராபர்ட், 150 மீற்றர் உயரக் கட்டிடம் ஒன்றின் மீது ஏறினார்.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம், பூமிக்கு இறங்கி வாருங்கள் என்று சொல்வதற்காக, நான் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி இந்தக் கட்டிடத்தில் ஏறுகிறேன் என்றார் அவர்.
Alain Robert, nicknamed 'French Spiderman', has scaled a 160-metre high skyscraper in Paris.
— Sky News (@SkyNews) April 20, 2023
He completed the climb in support of the Pension Reform protests and delivered his own message to French President Macron to "come down to Earth"
Find more ? https://t.co/5Zx8GrzRDU pic.twitter.com/wnXmhwFjVK