நேரடி ஒளிபரப்பில் உயிரிழந்த பிரபல பிரெஞ்சு ஸ்ட்ரீமர்
பிரான்சில் பிரபல ஸ்ட்ரீமர் நேரடி ஒளிபரப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் ஜீன் போர்மனோவ் (Jean Pormanove/JP) எனும் பிரபல ஸ்ட்ரீமர், 12 நாட்கள் நீடித்த நேரடி ஒளிபரப்பின்போது உயிரிழந்துள்ளார்.
46 வயதான அவரது உண்மையான பெயர் Raphael Graven. அவர் Kick என்ற பிரபல ஸ்ட்ரீமிங் தளத்தில் gaming மற்றும் சவாலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்துள்ளார்.
அவரது கடைசி நேரடி ஒளிபரப்பில், மற்ற ஸ்ட்ரீமர்களிடமிருந்து அவமானகரமான கேலி கிண்டல்களுக்கு ஆளான அவர், நேரடி தாக்குதல்களுக்கும் ஆளானார்.
நேரலை விளையாட்டில் அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது, நீண்ட நேரம் நெருக்கி பிடிக்கப்பட்டுள்ளார், வண்ண குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த ஒளிபரப்பின்மூலம் 36,000 யூரோ வரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் இணைந்து ஸ்ட்ரீம் செய்யும் Owen Cenazandotti என்பவர் போர்மனோவின் மரணத்தை திங்கட்கிழமை அறிவித்தார்.
போர்மனோவ், இதயம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், மரணத்திற்கு முன்பு தான் சிறையில் இருப்பது போல் உணர்வதாக, தனது தாய்க்கு செய்தி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மரணம் குறித்து பிரான்ஸ் பொலிஸார் விசாரணை நடத்தவருகின்றனர். Cenazandotti மற்றும் Hamadi எனும் ஸ்ட்ரீமர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
மேலும், Kick தளம் சம்பந்தப்பட்ட அனைவரையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் உள்ள வன்முறைகளின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |