இன்று நள்ளிரவுவரை மட்டுமே: பிரான்ஸ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
பிரான்சில் வாழ்ப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள். அதிகபட்சமாக இன்று நள்ளிரவு வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்.
காகித ஆவணங்களில் வருமான வரி செய்வதற்கான கடைசி நாள், மே 22ஆம் திகதியே (பிரான்சுக்கு வெளியே வாழ்பவர்களுக்கு, மே 25) முடிந்துவிட்டது. இது இணையத்தில் வருமான வரி தாக்கல் செய்வது குறித்த விடயமாகும்.
சிலருக்கு விதிவிலக்குகள்
தற்போது இந்த நடைமுறை பெரும்பாலும் ஒன்லைனில் செய்யப்பட்டாலும், இணைய பயன்பாட்டுக்கு வாய்ப்பு இல்லாதவர்களுக்காகவும், இணையத்தில் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து சரியாக தெரியாதவர்களுக்காகவும் சில விதிவிலக்குகளும் உள்ளன.
அப்படிபட்டவர்களால் குறிக்கப்பட்ட நேரத்துக்குள் வருமான வரி தாக்கல் செய்ய இயலாவிட்டால், அவர்கள் ஜூன் மாதம் 29ஆம் திகதிக்குள் வருமான வரி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் உதவியைக் கோரலாம், அபராதங்களையும் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.