பதற்றம் உடனே குறையாது... ஆஸ்திரேலியாவுக்கு பிரான்ஸ் பதிலடி! இரு நாடுகளுக்கு இடையே பெரிதாகும் விரிசல்
ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சந்திக்க விடுத்த அழைப்பை பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் அதிரடியாக நிராகரித்துள்ளார்.
ஆமெரிக்க, பிரத்தானியா உடன் ஏற்பட்ட AUKUS ஒப்பந்தத்தை தொடர்ந்து பிரான்ஸுடனான 40 பில்லியன் டொலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தங்கள் தூதர்களை நாடு திரும்புமாறு பிரான்ஸ் உத்தவிட்டது.
பின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்காவுக்கு தங்கள் தூதர்கள் திரும்புவார்கள் என பிரான்ஸ் அறிவித்தது.
இந்நிலையில் திங்கட்கிழமை Australian Broadcasting Corporation வானொலியில் பேசிய ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் Dan Tehan, அக்டோபர் மாதம் பாரிசில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டத்திற்காக செல்லும்போது, பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் Franck Riester-ஐ சந்திக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
ஆனால் பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் Franck Riester இந்த வாய்ப்பை நிராகரித்ததாக அவரது அலுவலகத்தின் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அமைச்சரின் சந்திப்புக்கான கோரிக்கையை நாங்கள் பின்பற்ற மாட்டோம். இது வழக்கம் போல் வணிகமாக இருந்தால் எங்களால் செல்ல முடியாது என்று பிரெஞ்சு அதிகாரி கூறினார்.
நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் ஆஸ்திரேலியாவின் சமீபத்திய முடிவுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உடனடியாக குறையாது என சூசகமாக கூறினார்.