அடிக்கடி கழுத்து வலியா? இதனை போக்க இந்த மூன்று பயிற்சிகளை செய்து வந்தாலே போதும்!
பொதுவாக ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும்.
மேலும் கழுத்து வலியானது தலையை அசைக்க முடியாமல் செய்து, ஒருவருக்கு கவனச்சிதறலை அதிகம் உண்டாக்கும்.
சிலருக்கு கழுத்து வலி தவறான நிலையில் அடர்ந்து நீண்ட நேரம் தவறான கோணத்தில் கழுத்தை வைத்துக் கொண்டு இருந்தாலும் வரும். முக்கியமாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு தான் கழுத்து வலியில் இருந்து அனைத்து வகையான வலிகளும் வரும்.
அந்தவகையில் கழுத்துவலியை போக்க கூடிய ஒரு சில யோகாசனங்களை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
பாலாசனா
முதலில் முழங்காலிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். பாதத்தின் மேல் பகுதி தரையில் இருக்க வேண்டும். கால் கட்டை விரல்கள் இரண்டும் தொட்டுக் கொண்டு இருக்குமாறு வைத்து குதிகாலின் மேல் உட்காருங்கள்.
இப்பொழுது உங்க இடுப்பை முன்னோக்கி நீட்டி, உங்க கைகளை முன்னோக்கி நீட்டி கொள்ளுங்கள். உங்க இடுப்பின் பின்பகுதி கால்களை நோக்கி இருக்க வேண்டும்.
உங்க நெற்றியை தரையில் படும்படி வைத்து கைகளை முன்னோக்கி நீட்டி இருங்கள். இதே நிலையில் 5 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விடுங்கள்.
பூனை அல்லது மாடு யோகா நிலை
உங்க கைகளையும் முழங்கால்களையும் பூனையைப் போல குனிந்து தரையில் வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளே இழுத்து உங்க முதுகெலும்பை நீட்டி வயிற்றை தரையை நோக்கி கீழே இறக்க வேண்டும்.
இப்பொழுது உங்க மூச்சை வெளியே விடும் போது முதுகெலும்பை வளைத்து உங்க தாடையை நெஞ்சுப் பகுதிக்கு கொண்டு வரவும். இந்த நிலையை மாற்ற 1 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
சவாசனம்
இந்த ஆசனம் செய்யும் போது உங்க கால்களை நன்றாக விரித்து உங்க உள்ளங்கைகளையும் மேல்நோக்கி இருக்குமாறு விரித்து தரையில் மல்லாக்க படுத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களை ரிலாக்ஸ் செய்ய மூச்சை இழுத்து விடுங்கள்.
முகத்தில் இருந்து கால் விரல்கள் வரை அனைத்து உடல் பாகங்களையும் படிப்படியாக ரிலாக்ஸ் செய்யுங்கள். இதே நிலையில் உங்க விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். இது உங்க கழுத்து வலியை போக்க பெரிதும் உதவுகிறது.