புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு! 7 நாட்கள் வைத்திருக்கலாம்: விஞ்ஞானிகள் சாதனை
அமெரிக்க விஞ்ஞானிகள் புரத அடிப்படையிலான புதிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழு புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இது குறித்து அக்குழுவினா் வெளியிட்டுள்ள தகவலில், இப்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க குளிா்பதன வசதி தேவை. இதனால் அந்த தடுப்பூசிக்கு மேம்பட்ட உற்பத்தித் திறனும் தேவைப்படுகிறது.
இதனால், தடுப்பூசியை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும் வளரும் நாடுகளுக்கு கடினமாக உள்ளது. ஆனால், இப்போது தயாரிக்கப்பட்டுள்ள புரத அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியை குளிா்பதன வசதியில் வைத்திருக்க தேவையில்லை.
அறை வெப்பநிலையில் குறைந்தது 7 நாட்கள் வைத்திருக்க முடியும். கொரோனா தொற்றுக்கு எதிராக வலுவான எதிா்ப்புத் திறனை இந்த தடுப்பூசி கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.