சீனாவில் வைரலான கரப்பான் பூச்சி தின்பண்டம்: ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்
சீனாவில் கரப்பான் பூச்சிகளை எண்ணெய் பொரித்து உணவாக விற்பனை செய்து வருவது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கரப்பான் பூச்சி பண்டம்
தெற்கு சீனாவில் உள்ள ஷூண்டே என்ற நகரில் அமைந்துள்ள பிரபலமான உணவகம் வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்(Water Roach Egg Tarts) என்ற புதிய உணவு பண்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதாவது கரப்பான் பூச்சி இனத்தை சேர்ந்த பூச்சிகளை எண்ணெயில் பொரித்து இனிப்பு பலகாரங்கள் மற்றும் முட்டையுடன் சேர்த்து வழங்கப்படும் உணவு தின்பண்டமே இந்த வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ் ஆகும்.
இந்த பூச்சிகள் சீன உணவு பாரம்பரியத்தில் சிறப்பு உள்ளூர் உணவாக விளங்கி வருவதுடன், சீனாவில் கலாச்சாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகளிலும் இந்த வண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ் உணவில் பயன்படுத்தப்படும் பூச்சிகள் சருமம் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஊட்டமளித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் ரத்த கட்டுகளையும் போக்க உதவுவதாக கூறப்படுகிறது.

இந்த பூச்சிகள் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுவதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
இந்த பூச்சி தின்பண்டம் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், இணையதள பயனர்கள் பலர் இந்த உணவு தொடர்பான நேர் மற்றும் எதிர் மாறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.