ஐரோப்பா உக்ரைனுக்கு என்றும் ஆதரவளிக்கும் - ஃப்ரெட்ரிக் மெர்ஸ் உறுதி
ஜேர்மனியின் புதிய தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜேர்மனியின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேட்டிவ் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), ஐரோப்பா உக்ரைனுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளார்.
ஜேர்மனியின் புதிய சேன்சலராகவுள்ள ஃப்ரெட்ரிக் மெர்ஸ், தனது X சமூக வலைதள பக்கத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூர்ந்தார்.
அவர் தனது பதிவில், "மூன்று ஆண்டுகளாக ஐரோப்பாவில் போர் நீடிக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளிலும் அழிவும் போர்க்குற்றங்களும் தொடர்கின்றன," என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், "ஐரோப்பா உறுதியாக உக்ரைனின் பக்கத்தில் நிற்கும். இப்போது இதைவிட அதிகமாக, உக்ரைனுக்கு சக்திவாய்ந்த நிலையை உருவாக்க வேண்டும். நீதியுள்ள சமாதானத்திற்காக, தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் நாட்டின் உரிமையும் பேச்சுவார்த்தைகளிலும் இருக்க வேண்டும்," என்று அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மெர்ஸ் பதவியேற்றதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவான ஜேர்மனியின் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Friedrich Merz, Ukraine Germany Europe, Germany New Chancellor