ஜேர்மனியின் புதிய தலைவர்., யார் இந்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்?
ஜேர்மனியின் கொன்சர்வேட்டிவ் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), நாட்டின் அடுத்த சேன்சலர் (Chancellor) ஆக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
Christian Democratic Union (CDU) மற்றும் அதன் கூட்டணி கட்சியான Christian Social Union (CSU) சேர்ந்து 28.5% வாக்குகளை பெற்று வெற்றியடைந்ததாக Associated Press தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸின் Social Democratic Party (SPD) தோல்வியடைந்த நிலையில், தீவிர வலதுசாரி Alternative for Germany (AfD) கட்சி 20.7 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மெர்ஸ் வெற்றி குறித்து பேச்சு வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றிய மெர்ஸ், "ஜேர்மனி மீண்டும் நம்பகத்தன்மையுடன் ஆளப்படும்," என்று தெரிவித்தார்.
மேலும், "எதிர்காலத்தில் கடினமான பணிகள் நம்மை எதிர்நோக்கிக்கொண்டு இருக்கின்றன. உலகம் நமக்காக காத்திருக்காது, ஆகவே உடனடியாக செயலில் ஈடுபட வேண்டும்," என்றார்.
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் யார்?
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் நவம்பர் 11, 1955-ஆம் ஆண்டு ஜேர்மனியின் பிரிலான் நகரில் பிறந்தார்.
சட்டவியல் குடும்ப பின்னணியுடன் law படித்த அவர், 1972-ஆம் ஆண்டில் CDU கட்சியில் இணைந்தார். அவர் 1994-இல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2000-இல் CDU-வின் பாராளுமன்றத் தலைவராக ஆனார்.
ஆனால் 2002-இல் அந்த அந்தஸ்தை ஏஞ்சலா மெர்கெலிடம் இழந்தார். பின்னர் 2009-இல் அரசியலை விட்டு விலகி சட்டம் மற்றும் நிதித் துறையில் சாதனை படைத்தார்.
2018-இல் மீண்டும் அரசியலுக்கு திரும்ப முயன்றார், ஆனால் வெற்றி பெறவில்லை. 2022-இல் CDU கட்சித் தலைவராக பதவியேற்றார்.
கடின குடியேற்றக் கொள்கை, மிகுந்த பொருளாதார வளர்ச்சி போன்ற கொள்கைகளை வலியுறுத்தும் மெர்ஸ், ஜேர்மனியின் புதிய அரசியலுக்கு வழிகாட்டவிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |