உலகில் அணு ஆயுதங்களை வைத்துள்ள சக்திவாய்ந்த நாடுகள்., முழு பட்டியல்
உலகில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.
அணு ஆயுத வரலாறு மற்றும் ஒப்பந்தங்கள்
அமெரிக்கா, இரண்டாம் உலகப்போரின் போது 1945-ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணு குண்டுகளை வீசி எதிர்ப்பாராத அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது.
இதன் பின்னணியில் 1968-ஆம் ஆண்டு அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (NPT) உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் மேலும் நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதாகும்.
இந்த ஒப்பந்தத்தின் போது, ஐந்து நாடுகளிடம் மட்டும் அணு ஆயுதங்கள் இருந்தன.
இந்த ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையெழுத்திடாத இந்தியாவும் பாக்கிஸ்தானும் பின்னர் தங்கள் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கின.
தென்னாப்பிரிக்கா 1979-இல் அணு ஆயுதங்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் பின்னர் 1991-இல் NPT-இல் சேருவதற்கு முன்பு அதை அகற்றியது.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வடகொரியா தனது சொந்த அணு ஆயுத திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கியது.
சில NPT உறுப்பினர்கள் விதிகளை மீறியதாக சந்தேகிக்கப்படுகின்றனர், ஆனால் ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருந்தவர்களைத் தவிர, யாரும் வெற்றிகரமாக அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை.
பிரிட்டானிகாவின் கூற்றுப்படி, ஈரான் 2023-இல் கிட்டத்தட்ட நெருங்கியது, ஆனால் அதிகாரப்பூர்வமாக அது ஆரம்பக்கட்டத்தைக்கூட தாண்டவில்லை.
உலகில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
நாடுகள் தங்கள் முதல் அணு ஆயுத சோதனை நடந்த ஆண்டு வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
உலகில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள்
- அமெரிக்கா (1945) – முதல் அணு ஆயுதங்களை உருவாக்கிய நாடு. 1,054 அணு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.
- ரஷ்யா (1949) – உலகின் மிகப்பெரிய அணு ஆயுத களஞ்சியத்தைக் கொண்ட நாடு. 5,889 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
- பிரித்தானியா (1952) – அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 260-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
- பிரான்ஸ் (1960) – அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனத்தில் முதல் அணு பரிசோதனை மேற்கொண்டது. 1966-1996 வரை 194 அணு பரிசோதனைகள் செய்துள்ளது.
- சீனா (1964) – 1964 முதல் 1996 வரை 45 அணு பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது.
- இந்தியா (1974) – 1974-இல் peaceful nuclear explosion என்ற பெயரில் தனது முதல் அணு பரிசோதனையை மேற்கொண்டது. 1998-இல் "Pokhran-II" என்ற இரண்டாவது அணு பரிசோதனையை செய்தது.
- பாகிஸ்தான் (1998) – 1998 மே 28 அன்று ஆறாம் அணு பரிசோதனை மேற்கொண்டது.
- வட கொரியா (2006) – ரகசிய அணு ஆயுத திட்டத்தை மேற்கொண்டு 2006-இல் முதல் அணு பரிசோதனையை நடத்தியது.
இஸ்ரேல்
இதற்கிடையில், இஸ்ரேல் அணுவாயுதங்கள் வைத்திருப்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
இஸ்ரேல் 1960-களின் பிற்பகுதியில் அல்லது 1970-களின் முற்பகுதியில் அணு ஆயுதங்களை உருவாக்கி சோதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணு ஆயுதங்களின் பரவலை கட்டுப்படுத்த உலகம் முயன்றாலும், அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள் உலக அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
இதனால், சர்வதேச பாதுகாப்பு, நட்புறவுகள் மற்றும் யுத்த முடிவுகள் போன்றவை தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |