உக்ரைனுக்கு ஆதரவு - ஜேர்மனியின் புதிய தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் உறுதி
ஜேர்மனியின் புதிய தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் உக்ரைனுக்கு தனது ஆதரவை உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட கடுமையான மோதலுக்கு பின்னர், ஜேர்மனியின் புதிய சேன்சலராக எதிர்பார்க்கப்படும் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) உக்ரைனுக்கு தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.
மெர்ஸ் தனது X பக்கத்தில் அவர், "வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்திலும் உக்ரைனின் நன்மைக்காக நாங்கள் உறுதியாக நிற்கிறோம்" என்று பதிவிட்டார்.
"இந்த போரில், தாக்குபவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை நாம் ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது" என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி போன்ற மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
[IM7AKYR[
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Support Ukraine, Ukraine Russia War, Friedrich Merz Zelenskyy