ரஷ்யா - உக்ரைன் தோழிகள் இரு நாடுகளுக்கும் அமைதி வேண்டி தமிழக கோயில்களில் வழிபாடு
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இரண்டு தோழிகள் இரு நாடுகளுக்கு இடையே அமைதி வேண்டி தமிழக கோயில்களில் வழிபாடு செய்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் தோழிகள் வழிபாடு
ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஷெனியா(27) என்பவரும், உக்ரைனைச் சேர்ந்தவர் இலியானா(29) என்பவரும் தோழிகள் ஆவார். இவர்கள் இருவரும் இரு நாடுகளுக்கும் இடையே போர் துவங்குவதற்கு முன்பு இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போரை நிறுத்தவும், அமைதி வேண்டியும் தமிழக கோயில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக இவர்கள் கடந்த இரு நாட்களாக கும்பகோணம் பகுதியில் உள்ள திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கஞ்சனூர் சுக்கிரன், திருமணஞ்சேரி ஆகிய கோயில்களில் வழிபாடு செய்துள்ளனர்.
மேலும், ஆடுதுறை அருகேயுள்ள 69 சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருமந்திரம் அருளிய திருமூலர் கோயிலிலும் வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று கோயில்களில் வழிபாடு செய்துள்ளோம்.
எங்களுடைய நம்பிக்கை வீண் போகாது. இதற்கு அடுத்ததாக நாங்கள் மதுரை மீனாட்சி அம்மன், பழநி, திருவண்ணாமலை ஆகிய கோயில்களிலும் வழிபாடு செய்யவுள்ளோம்" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |