ரூ.85க்கு ஏலம் விடப்பட்ட வீடு! ரூ 3.8 கோடிக்கு மறுசீரமைப்பு செய்த பெண்: காரணம் என்ன தெரியுமா?
இத்தாலியில் ரூ.85க்கு ஏலம் விடப்பட்ட வீடு ஒன்றை ரூ. 3.8 கோடிக்கு பெண் ஒருவர் பழுதுபார்த்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரூ.85க்கு ஏலம் விடப்பட்ட வீடு
சிகாகோவை (Chicago) சேர்ந்த நிதி ஆலோசகரான மெரிடித் தபோன்(Meredith Tabbone) என்ற பெண், இத்தாலியின் சம்புகா டி சிசிலியாவில்(Sambuca di Sicilia) உள்ள 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இடிபாடு நிறைந்த கட்டிடம் $1க்கு (ரூ.85) ஏலத்தில் வந்த நிலையில் அதனை வாங்கினார்.
பல கிராமப்புற இத்தாலிய நகரங்களைப் போலவே சம்புகாவில் மக்கள் தொகை குறைந்து வருவதால் 2019 இல், சமூகத்தை புதுப்பிக்க அடையாள விலைக்கு கைவிடப்பட்ட வீடுகளை ஏலம் விட தொடங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மெரிடித் தபோன், தனது கொள்ளுத் தாத்தாவின் குடும்ப வேர்களைக் கொண்ட கிராமத்தில் வீடு ஒன்றை வாங்கினார்.
ஆனால் மெரிடித் தபோன் வாங்கிய இந்த வீடு மின்சாரம், குடிநீர் இல்லாமல், "தரையில் இரண்டு அடி புறாக்கழிவு" உடன் இருந்தது என்று அவர் CNBC Make It இடம் விவரித்தார்.
ரூ 3.8 கோடிக்கு மறுசீரமைப்பு
ஏலத்தின் இறுதி வெற்றியில் வெறும் $6,200 (சுமார் ரூ. 5 லட்சம்) செலவு செய்த மெரிடித் தபோன், தான் வாங்கிய இடம் மிகவும் சிறியது என்பதை உணர்ந்து அருகிலுள்ள சொத்தை $23,000 (சுமார் ரூ. 19.5 லட்சம்) க்கு வாங்கி, இரண்டையும் ஒரு வீடாக இணைத்தார்.
மறுசீரமைப்பு செயல்முறை ஆரம்பத்தில் $40,000 (சுமார் ரூ. 34 லட்சம்) என பட்ஜெட் செய்த நிலையில், அது கிட்டத்தட்ட ரூ.3.8 கோடியாக($446,000) உயர்ந்தது.
"நான் என் வாழ்க்கையில் இதுபோன்ற மறுசீரமைப்பு செய்ததில்லை," என்று மெரிடித் தபோன் ஒப்புக் கொண்டதோடு இந்த சிக்கலான பணியை நிர்வகிக்க ஒரு முழு குழுவையும் பணியமர்த்தியுள்ளார்.
சோர் தருணங்கள் மற்றும் கோடிக்கணக்கான செலவு விரக்தி ஆகியவை ஏற்பட்ட போதிலும், மெரிடித் தபோன் தனது குடும்ப வரலாற்றாலும், தனது மூதாதையர் கிராமத்தில் ஒரு வீட்டை உருவாக்கும் விருப்பத்தாலும் தொடர்ந்து உந்தப்பட்டார்.
மறுசீரமைப்புக்கு பிறகு பல சலுகைகள் வந்தாலும், தனது இத்தாலிய வீட்டை விற்க மாட்டேன் என்று மெரிடித் தபோன் வலியுறுத்துகிறார்.
நகரத்தில் மிகப்பெரிய மாற்றம்
இந்த திட்டத்திற்கு பிறகு சம்புகாவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது, நகர மேயர் கியூசெப் காசியோப்போ, இந்த திட்டம் உள்ளூர் பொருளாதாரத்தில் $21.5 மில்லியனை செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த மாற்றத்தால் மேலும் ஏலங்கள் நடத்தப்பட்டதுடன் மொத்தமாக சம்புகா டி சிசிலியாவில் 250 வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |