இலங்கையர்கள் முதல் ஈரானியர்கள் வரை... கனடாவில் அகதிகள் இணைந்து நடத்தும் ஒரு நிறுவனம்
கனேடிய மாகாணம் ஒன்றில் பல்வேறு நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் இணைந்து ஒரு கடையில் பணி செய்கிறார்கள்.
அவர்கள், கனேடிய இராணுவம், பொலிசார், தீயணைப்புத்துறை, வனத்துறையினர் முதலான பல்வேறு துறையில் பணிபுரிவோருக்கான சீருடைகளை தயாரிக்கிறார்கள்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரில் அமைந்துள்ள அந்த தையல் கடைக்குள் சென்றால், அது ஐக்கிய நாடுகள் சபையைப் போல் இருக்கிறது.
அந்த கடையின் விசேஷம் என்னவென்றால், அங்கு பணிபுரியும் தையல் கலைஞர்கள், மேலாளர்கள் ஏன் கடையின் உரிமையாளர் என பெரும்பாலானோர் கனடாவுக்கு அகதிகளாக வந்தவர்கள்தான்!
PHOTO BY JASON PAYNE /PNG
இலங்கை, வியட்நாம், சீனா, ஈரான், அர்மீனியா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் குர்திஸ்தான் என பல நாடுகளைச் சேர்ந்த அந்த பணியாளர்கள், மூன்று மாதங்களுக்கொருமுறை, தத்தம் நாட்டு உணவுவகைகளை சமைத்துக் கொண்டுவருவார்களாம்.
அவர்கள் அனைவரும் இணைந்து, 60 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அந்த கடையில், பல்வேறு துறையில் உள்ளவர்களுக்கு, உதாரணமாக, கனடா இராணுவம், பொலிசார், தீயணைப்புத்துறை, வனத்துறையினர் முதலான பல்வேறு துறையில் பணிபுரிவோருக்கான சீருடைகளை தயாரிக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு பயங்கர கதை உள்ளது.
எல்லரையும் விட பயங்கமான கதை, ஒரு பெண்ணுடையது. 14 வயதில் திருமணமாகி, இரண்டு பதின்ம வயதுப் பிள்ளைகளுடன் கனடாவுக்கு அகதியாக வந்த அந்த பெண்ணின் கணவரை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள், அவரது சகோதரரோ சிரியாவில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
பல நாட்டவர்கள், பல்வேறு இனப்பின்னணி கொண்ட இந்த அகதிகளுக்காக அந்த கடையை நடத்துபவரும் அகதியாக வந்த ஒருவர்தான். அவரது பெயர் Farid Rohani. ஈரானிலிருந்து ஒரு சிறு பையனாக கனடாவுக்கு வந்த Farid, மூழ்கும் நிலையிலிருந்த அந்த கடையை வாங்கி பலருக்கு வேலை கொடுத்திருக்கிறார்.
ஒரு சீருடையின் ஒவ்வொரு பாகத்தையும் இங்கு பணிபுரியும் வெவ்வேறு நபர்கள் உருவாக்குகிறார்கள் என்று கூறும் Farid, ஒரு உடலில் பல்வேறு பாகங்கள் இருந்தாலும், அவை எல்லாம் இணைந்து ஒரே உடலாக செயல்படுவதைப் போல இங்குள்ளவர்கள் பணிபுரிகிறார்கள், அதுதானே வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார்!
PHOTO BY JASON PAYNE /PNG