பிரித்தானிய உதவியுடன் MiG-31 இராணுவ போர்.,விமானத்தை கடத்த முயன்ற உக்ரைன்! சதித்திட்டத்தை முறியடித்த ரஷ்யா
இராணுவ ஜெட் விமானத்தை கடத்தும் உக்ரைனின் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போர் விமானம்
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகத்து மாதம், கீவ்வின் பாதுகாப்பு சேவைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையில், தனது விமானத்தை நாட்டிற்கு பறக்கவிட்டது. 
அதன் பின்னர் ஒரு ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர் விமானி உக்ரைனுக்கு தப்பிச் சென்றார். ஆனால் அவரது குழு உறுப்பினர்கள் தப்பிக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக உக்ரைன் மற்றும் ரஷ்யா அப்போதே கூறின. அதனைத் தொடர்ந்து 2024யில் ஹெலிகொப்டர் விமானி மாக்சிம் குஸ்மினோவ் ஸ்பெயினில் இறந்து கிடந்தார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் உயர் ரக போர் விமானம் ஒன்றை கடத்த உக்ரைன் முயற்சித்துள்ளது. ஆனால் ரஷ்யா அதனை முறியடித்துள்ளது.
ஆங்கிலோ-உக்ரேனிய சதித்திட்டம்
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB), ஒரு ரஷ்ய இராணுவ ஜெட் விமானத்தை கடத்தி ருமேனியாவிற்கு பறக்கவிட ஆங்கிலோ-உக்ரேனிய சதித்திட்டத்தை முறியடித்ததாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து சட்ட அமலாக்க நிறுவனம் கூறுகையில், "உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதன் பிரித்தானிய மேற்பார்வையாளர்கள், ரஷ்ய MiG-31 உயர் உயர சூப்பர்சோனிக் போர் விமானத்தை கடத்த மேற்கொண்ட நடவடிக்கை கண்டுபிடித்து முறியடிக்கப்பட்டது" என்றது.
அதேபோல் FSBயின் கூற்றுப்படி, கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ருமேனியாவின் கான்ஸ்டன்டாவில் உள்ள நேட்டோ தளத்தை நோக்கி விமானத்தை பறக்கவிட உக்ரைன் திட்டமிட்டுள்ளது, அங்கு அது வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கும்.
பாரிய அளவிலான ஆத்திரமூட்டலை ஏற்பாடு செய்வதற்கான உக்ரேனிய மற்றும் பிரித்தானிய சேவைகளின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன" என தெரிவித்துள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |