நிலக்கரியை தொடர்ந்து பிரபல நாட்டில் ஏற்பட்ட டீசல் தட்டுப்பாடு! சாலையில் வரிசைகட்டி காத்திருக்கும் மக்கள்
சீனாவில் நிலக்கரியை தொடர்ந்து டீசலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே 2வது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சீனாவில் நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றைக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் சீனாவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும்பாலும் இருட்டில் தத்தளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு ரேஷன் முறையில் குறைவான அளவு மட்டுமே வாகனங்களுக்கு டீசல் வழங்கப்படுகிறது. இ
துகுறித்து ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் கூறியது, டீசல் விலை உயர்வால் ஏற்கனவே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் எரிவாயு நிலையங்களில் டீசல் நிரப்ப 100 யுவான் அல்லது 15.70 டாலர் கட்டணம் விதிக்கின்றனர். செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து இன்று வரை சுமார் 55 சாத்வீகம் டீசல் விலை உயர்ந்துள்ளது.