வெடித்து சிதறிய எரிபொருள் நிலையம்: மத்திய கிழக்கு நாடொன்றில் 15 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் 15 பேர் வரை பலியாகியுள்ளனர்.
வெடிப்பு விபத்து
ஏமன் நாட்டின் பைடா மாகாணத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த வெடிப்பு விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த வெடிப்பு பெரும் தீயை ஏற்படுத்தியதை தொடர்ந்து கருப்பு புகை வானத்தை நோக்கி பரவி, அழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, குறைந்தது 67 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 40 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
வெடிப்பில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஸஹர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |