பனாமா கால்வாய் அருகே வெடித்த எரிபொருள் லொறி: பரபரப்பு சிசிடிவி காட்சி
அமெரிக்காவில் பனாமா கால்வாயில் உள்ள பாலத்தின் அருகே எரிபொருள் லொறி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென வெடித்த லொறி
திங்கட்கிழமை அமெரிக்காவில் பனாமா கால்வாயை கடக்கும் முக்கிய பாலமான “பிரிட்ஜ் ஆஃப் தி அமெரிக்காஸ்” பாலத்தின் அருகே எரிபொருள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எரிபொருள் லொறியானது, எரிபொருள் நிரப்பும் முனையத்தில் நின்று கொண்டிருந்த போது இந்த வெடிப்பு சம்பவமானது ஏற்பட்டுள்ளது.
#BREAKING ALERT🚨
— Trading With Logic (@Tradewith_kd) April 7, 2026
ATTACK BY IRAN🇮🇷ON AMERICA OR NORMAL ACCIDENT?
🇵🇦 MASSIVE EXPLOSION ROCKS PANAMA NEAR THE BRIDGE OF THE AMERICAS🇺🇸@grok please verify FAST‼️‼️ pic.twitter.com/T67h2NkuGF
உயிரிழந்தவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்தவர் என்றும், காயமடைந்த இருவர் தீயணைப்பு துறையை சார்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளில், லொறியில் வெடிப்பு ஏற்பட்டவுடன், ஒரு பெரிய நெருப்பு பந்து உருவானதும், அதனை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்ததும் பார்க்க முடிகிறது.
இந்த வெடிப்பு விபத்தின் காரணமாக பனாமா கால்வாயில் எந்தவொரு செயல்பாடுகளும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |