கனடாவில் விமான விபத்தில் பலியான கேரள இளைஞர்: திங்கட்கிழமை இந்தியாவில் இறுதிச்சடங்கு
கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கேரள இளைஞர் ஒருவர் பலியான நிலையில், அவரது உடல் திங்கட்கிழமை இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
கேரள இளைஞர் பலி
கனடாவின் Newfoundland and Labrador மாகாணத்தில், வான்வழி ஆய்வு நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றிவந்தவர் கௌதம் சந்தோஷ் (27).
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கௌதம், ஜூலை மாதம் 26ஆம் திகதி நிகழ்ந்த விமான விபத்தொன்றில் பலியானார்.
அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில், கௌதமும், அந்த விமானத்தின் விமானியான 54 வயது நபரும் பலியாகிவிட்டார்கள்.
விபத்தில் கௌதமின் உடல் கருகிவிட்டதால், கனடாவிலேயே அவருக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்த அவரது உறவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
ஆனால், தன் மகனை இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என கௌதமின் தாயார் ஆசைப்பட்டதால், அவரது உடல் திங்கட்கிழமை காலை இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
திங்கட்கிழமை, கௌதமின் உடல் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள Santhi Kavadam என்னுமிடத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |