தெற்கு உக்ரைனில் மீண்டும் பொதுமக்கள் வெளியேற்றம்: துணைப் பிரதமர் அறிவிப்பு!
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படும் என அந்த நாட்டின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது மூன்றாவது மாதமாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் ராணுவ தாக்குதலானது உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
அந்தவகையில் உக்ரைனின் 2000 ராணுவ வீரர்கள் மற்றும் 1000 பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பதுங்கி இருந்த மரியுபோல் நகரின் இரும்பு ஆலையை ரஷ்ய ராணுவத்தினர் நேற்று முதல் தாக்க தொடங்கியுள்ளனர்.
நேற்று ஆலைக்குள் பதுங்கி இருந்தவர்கள் சிலரை உக்ரைன் ராணுவத்தினர் வெளியேற்றியதை தொடர்ந்து, இந்த தாக்குதலை ரஷ்ய ராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளில் உள்ள உக்ரைனிய பொதுமக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படும் என உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் 4,00,000 டன் தானியங்களை வெளியேற்றிய ரஷ்யா: உணவுத்துறை அமைச்சகம் தகவல்!
மேலும் இந்த வெளியேற்றமானது, இரண்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என்றும், அவற்றில் Melitopol மற்றும் Berdyans'k இடையே ஒரு நகரமான Tokmak-கில் மாலை 3 மணிக்கும், Zaporizhzhia பகுதியில் உள்ள Vasylivka-கில் மாலை 4 மனிக்கும் மேற்கொள்ளபடும் என தெரிவித்துள்ளது.