தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்பால் எதிர்கால மனிதன் எப்படி மாறப்போகிறான்? ஒரு எச்சரிக்கை செய்தி
தொழில்நுட்ப வளர்ச்சி மனித உடல் மீது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது குறித்த சில பயங்கர தகவல்கள் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளன.
எதிர்கால மனிதன் எப்படி இருப்பான் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்டுள்ள மனித உருவம் கவலையை உருவாக்குவதாக அமைந்துள்ளது.
மொபைல் போன், கம்ப்யூட்டர் என உலகை கைவிரல் நுனியில் மனித இனம் கொண்டுவந்துவிட்டது என்னவோ உண்மைதான்.
ஆனால், அந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித உடல் மீது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது குறித்த சில பயங்கர தகவல்கள் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளன.
எதிர்கால மனிதன் எப்படி இருப்பான் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்டுள்ள மனித உருவம் கவலையை உருவாக்குவதாக அமைந்துள்ளது.
அதிக அளவில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் முழங்கைகள் 90 டிகிரியில் நின்று, மண்டை ஓடு தடித்து, முதுகு வளைந்து, எதிர்கால மனிதன் எப்படி இருப்பான் என்பதை ஒரு உருவமாகக் கொண்டுவந்தால், அந்த உருவத்தைப் பார்ப்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது.
எப்போதும் மொபைலில் குறுஞ்செய்திகள் அனுப்பி அனுப்பி வளைந்துபோன விரல்கள், மொபைல் மற்றும் கணினியிலிருந்து வரும் ரேடியோ கதிர்களின் பலனாக தடித்துப்போன மண்டை ஓடு என வழக்கத்துக்கு மாறாகக் காணப்படுகிறான் எதிர்கால மனிதன்.
இன்னொரு விடயம், மொபைல் மற்றும் கணினியிலிருந்து வரும் ஒளியை தடுப்பதற்காக மனிதனுக்கு இரண்டாம் இமை ஒன்று கூட உருவாகிவிடுமாம். இதுபோக, மன அழுத்தம் படுத்தப்போகும் பாடு வேறு.
இப்போதே மனிதன் விழித்துக்கொண்டால், இந்த பிரச்சினைகளை தவிர்க்கமுடியும் என்பதுதான் ஒரே நல்ல செய்தி.
Images: Toll Free Forwarding