ரஷ்ய வைரங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கவுள்ள G7 நாடுகள்
ரஷ்யாவின் வைரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க G7 நாடுகள் முடிவு செய்துள்ளன.
ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க G7 நாடுகள் முடிவு செய்துள்ளன. நேற்று நடைபெற்ற ஓன்லைன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் நிதி சேகரிப்பை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து வைரம் இறக்குமதிக்கு ஜனவரி 1ம் திகதி முதல் தடை விதிக்கப்படும்.
மார்ச் 1 முதல், மற்ற நாடுகளில் பதப்படுத்தப்பட்ட ரஷ்ய வைரங்களும் தடையில் சேர்க்கப்படும்.
உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்து கொண்ட மெய்நிகர் உச்சிமாநாட்டிற்குப் (Virtual Summit) பிறகு வெளியிடப்பட்ட G7 அறிக்கை, ரஷ்யாவில் வெட்டியெடுக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்படும் தொழில்துறை அல்லாத வைரங்கள் மீதான முதல் கட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியது.
அதே நேரத்தில், பல வைர உற்பத்தி நாடுகள் மற்றும் முன்னணி பிராண்டுகள் G7 நாடுகளிடமிருந்து இந்த முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
G7 அமைப்பின் தலைவராக இருக்கும் ஜப்பானின் பிரதமர் Fumio Kishida, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக சுமார் 4.5 பில்லியன் டொலர் கூடுதல் நிதியை வழங்கத் தயாராக இருப்பதாக உச்சிமாநாட்டில் தெரிவித்தார்.
ஜி7 அமைப்பில் பிரித்தானிய, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
G7 nations ban import of Russian rough diamonds, G7 nations ban Russian diamonds