ககன்யான் திட்டம்: ஸ்ரோவின் அடுத்த சோதனை வெற்றிப்பெறுமா?
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை வருகிற 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
"ககன்யான்"
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த நாட்களில் தெரிவித்திருந்தது.
மனிதர்களைக் கொண்டு செல்லு இந்த விண்கலத்திற்கு "ககன்யான்" என பெயர் வைத்துள்ளார்கள்.
விண்ணில் 400 கிலோ மீற்றர் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதே இந்த திட்டமாகும்.
இந்த திட்டமானது மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதன்படி இத்திட்டம் வருகிற 2025-ம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இத்திட்டத்தின் சோதனை ஓட்டத்தை சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்திருகின்றது.
சோதனை ஓட்டம்
காலை 7 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து டிவி-டி1 ராக்கெட் மூலம், 'குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்' என்று அழைக்கப்படும் விண்வெளி வீரர்கள் விண்ணிற்கு செல்லவுள்ளார்கள்.
டிவி-டி1 என்ற ஒரே ஒரு உந்து சக்தி கொண்ட திரவ எரிபொருள் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இது 35 கிலோ மீற்றர் உயரம் வரை விண்ணிற்கு செல்லவிருகின்றது.
விண்வெளி வீரர்கள் தங்களது ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியில் ராக்கெட்டின் மேல் பகுதியில் ஒரு அமைப்பு பொருத்தப்பட்டு இருகின்றது.
பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்தில் சென்ற உடன் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து, பாராசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் தரையிறக்கவுள்ளனர்.
வீரர்கள் அமரும் பகுதி பத்திரமாக திட்டமிட்ட இலக்கு வரை சென்று மீண்டும் சேதமடையாமல் கடலில் வந்து தரை இறங்குகிறதா? என்று பார்க்கப்படுவதற்காகவே இந்த சோதனை ஓட்டம் செய்யப்படுகின்றது.
வெற்றிகரமாக இது தரையிறங்கி விட்டால், வங்கக்கடலில் விழுந்த உடன் இதனை இந்திய கடற்படையினர் மீட்டு எடுத்து மீண்டுயம் இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள்.
மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பொதுமக்கள் பார்வையிட முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |