மீண்டும் கசிந்த சாம்சங்கின் புதிய தொழில்நுட்பம்: பிரபலப்படுத்தும் முயற்சியா?
சாம்சங் நிறுவனத்தின் மற்றொரு தொழில்நுட்ப கசிவாக Galaxy A53 மீண்டும் தாய்லாந்தில் உள்ள சாம்சங் ஆஃப்லைன் ஸ்டோரிலிருந்து நேரடியாக வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy A53 5G மாடல் இந்த மாதம்(மார்ச்) 17 திகதி வெளியாயிருந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் உள்ள சாம்சங் ஆஃப்லைன் ஸ்டோரிலிருந்து நேரடியாக விற்பனைக்கு வெளிவந்துள்ளது.
மேலும் கசிவாகியுள்ள அந்த Galaxy A53 5G மாடலுடன் சாம்சங் ஸ்டோர் ஊழியர் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியீட்டு இருப்பது, சாம்சங் நிறுவனம் அதன் வரவிருக்கும் தொலைபேசிகளை வேண்டுமென்றே கசியவிடுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த Galaxy A53 5G மடலானது 108MP கேமரா,8K மற்றும் 4K@60fps வீடியோ பதிவு, குவாட் கேமரா அமைப்பு, மேட் பினிஷிங் செய்யப்பட்ட தங்க மற்றும் கருப்பு நிற உலோகப் பின் சட்டத்தை இந்த தொலைப்பேசி கொண்டுள்ளது, மற்றும் அதன் தொலைப்பேசி தொகுப்பில் இருந்து சார்ஜ்ர் வசதிகளையும் நீக்கியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் இந்த தொழிநுட்ப கசிவானது அறிவிக்கப்படாத தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் முறையாக பார்க்கப்பட்டாலும், விரைவில் இன்னும் சில நாள்களில் அதிகாரப்பூர்வமாக அனைத்து சாங்சுங் சந்தைகளிலும் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் வாய்ஸ் அழைப்பில் பேசுபவரா? மொபைல் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?